தோனி ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! - Seithipunal
Seithipunal


முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி மற்றும் அவரது மனைவியின் தயாரிப்பில் உருவாகியுள்ள எல்.ஜி.எம். திரைப்படம் வரும் ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இயக்குனர் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நிலையில், இதில் தோனியுடன் அவரது மனைவி சாக்ஷியுடன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய சஸ்பென்ஸ் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் தோனி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

இதனையடுத்து திரையில் தோனியை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர். அதன்படி இந்த படத்தில் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட கதாபாத்திரத்தில் தோனி நடித்துள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MS Dhoni guest role in LGM movie


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->