கண்ணனை ஏற்றுக்கொண்ட மூர்த்தி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களுக்கு உற்சாகம்.. இன்றைய எபிசோடில் சுவாரஸ்யம்.! - Seithipunal
Seithipunal


சின்னத்திரை சீரியல்களில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிகவும் பிரபலமானது. இதில் கடந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் அனைவரும் சென்னைக்கு டூர் செல்வதை போலவும், திருட்டுத்தனமாக கண்ணன் கடை சாவியை எடுத்து திறந்து வைத்து வியாபாரம் செய்வதை போலவும் காட்டப்பட்டிருக்கும். 

டூர் முடிந்து திரும்பி வந்ததும் கண்ணன் திருட்டுத்தனமாக கடை திறந்த விஷயம் மூர்த்திக்கு தெரியவரும் போது மிகவும் கொந்தளித்து கண்ணனை வீட்டிற்கு வெளியே வைத்தே கண்டபடி திட்டுவார். அப்போது தனம் அவனை உள்ளே அழைத்து வாருங்கள்.அப்புறம் திட்டுங்கள் என்று கூறுவார். 

பின்னர் வீட்டிற்குள் அழைத்து அவனை மிகவும் மோசமாக மூர்த்தி திட்டி விடுவார். கண்ணனும் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு அங்கிருந்து செல்வார். ஆனால், இன்றைய எபிசோடில் கண்ணனின் வியாபார யுக்தியை பாராட்டி மூர்த்தி ஜீவா மற்றும் கதிரிடம் பேசுவார். 

அதில், "நான் கூட இவ்வளவு சிறிய வயதில் கண்ணன் திருமணம் செய்து விட்டானே? எப்படி உறுப்படுவான் என்று நினைத்திருந்தேன். ஆனால், இவ்வளவு சாமர்த்தியமாக அவன் கடை திறந்து வியாபாரம் செய்து இருப்பது. ஆச்சரியமாக இருக்கிறது. நம் கண்ணணா? இது என்று ஆச்சரியமாக தம்பிகளிடம் கூறுவார். இதைக் கேட்ட ஜீவா மற்றும் கதிர் இருவரும் எங்களுக்கும் அப்படித்தான் ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறுவார்கள். ஒருவழியாக கண்ணனை மூர்த்தி புரிந்துகொண்டார். விரைவில் வீட்டுக்குள் அழைத்துக் கொள்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Moorthy accept kannan


கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,
Seithipunal