அரவிந்த்சாமி நடிப்பில் ''மெய்யழகன்''! வைரலாகும் நியூ போஸ்டர்.!
Meyazhagan movie new poster
நடிகர் அரவிந்த்சாமி ரஜினியின் தளபதி, ரோஜா போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். பம்பாய், மின்சார கனவு, இந்திரா என்ற அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.
இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்து வருபவர். சில காலங்கள் ஓய்வில் இருந்த அரவிந்த்சாமி 'தனி ஒருவன்' திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து தலைவி திரைப்படத்தில் எம்ஜிஆர் ஆகவும் சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படத்தில் கேமியோ ரோலிலும் நடித்திருந்தார்.
அடுத்ததாக கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் ''மெய்யழகன்'' திரைப்படத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்குகிறார்.

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து இன்று அரவிந்த்சாமியின் 54 வது பிறந்த நாளை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ''மெய்யழகன்'' திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Meyazhagan movie new poster