நான்கு நாட்களிலேயே வசூல் வேட்டை நடத்திய மார்க் ஆண்டனி.! எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


நான்கு நாட்களிலேயே வசூல் வேட்டை நடத்திய மார்க் ஆண்டனி.! எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். 

மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ரிது வர்மா, சுனில், செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ள இந்தத் திரைப்படம் கடந்த 15-ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படம் வெளியான முதல் நாளில் மட்டும் 9 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில், மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் ஐம்பது கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mark antony movie 50 crores collection at four days


கருத்துக் கணிப்பு

பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்ள இருப்பதுAdvertisement

கருத்துக் கணிப்பு

பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்ள இருப்பது
Seithipunal
--> -->