மஞ்சு வாரியரை விடாமல் பின் தொடர்ந்த நபர்! கடுப்பான மஞ்சு வாரியர் என்ன செய்தார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


நம் நாட்டில் நடிகர் நடிகைகள் என்றாலே அவர்கள் மீது ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஒரு கிரேஸ் அதிகமாக இருக்கும். எப்படியாவது அவர்களை பார்க்க வேண்டும் அவர்களிடம் பேச வேண்டும் ஆட்டோகிராப் வாங்க வேண்டும். என்ற ஒரு ஆர்வ மிகுதியிருந்து கொண்டே இருக்கும். அதுபோன்ற ஒரு சம்பவம் தான் கேரளாவில் நடைபெற்று இருக்கிறது.

மலையாள சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் மஞ்சு வாரியர். நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் பரதநாட்டிய கலைஞர் என பல முகம் கொண்டவர். தமிழில் அசுரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது அபாரமான நடிப்பாற்றலால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தவர். இந்த வருடம் பொங்கலுக்கு ரிலீசான துணிவு திரைப்படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் இடம் பெற்று இருந்த சண்டை காட்சிகள்  ரசிகர்களிடம் வெகுவாக பாராட்டப்பட்டது.

இந்நிலையில் மஞ்சு வாரியர் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் போது ஒரு சம்பவம் நடைபெற்று இருக்கிறது. எர்ணாகுளத்தில் ஒரு நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட மஞ்சு வாரியர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று இருக்கிறார். அப்போது தன்னுடைய காரை வேறொரு கார் நீண்ட நேரமாக பின் தொடர்ந்து வருவதை அறிந்து  தனது டிரைவரிடம் காரை நிறுத்தச் சொல்லி இருக்கிறார்.

அதன் பிறகு அவரை பின்தொடர்ந்து வந்த  காரிலிருந்த பெண்ணிடம்  என்ன வேண்டும்? என்று கேட்க அவர் தன்னுடைய அம்மா பிறந்தநாள் நெருங்கி வருவதாகவும் அம்மா மஞ்சு வாரியரின் தீவிர ரசிகை எனவும் அவரிடம் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தனது உதவியாளரிடம் தன்னுடைய செல்போன் எண்ணை அந்த பெண்ணிற்கு கொடுக்கும்படி கூறிய மஞ்சு வாரியர்  இதுபோன்று வேகமாக வருவது பின் தொடர்வது  போன்றவற்றை  தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கி விட்டுச் சென்றிருக்கிறார் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

manju warrier reaction after a car followed her for a while


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->