மூன்றாவது முறையாக இணையும் லோகேஷ் - விஜய்.!
lokesh kanakaraj and vijay joind third time
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய லியோ திரைப்படம் கடந்த 19-ம் தேதி நாடு முழுவதும் வெளியானது. இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூல் ரீதியாக உலக அளவில் 400 கோடி ரூபாயைக் கடந்துள்ளது.
ஏற்கனவே நடிகர் விஜய் லோகேஷூடன் 'மாஸ்டர்' படத்தில் இணைந்திருந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக 'லியோ' படத்தில் இணைந்திருந்தனர்.

இந்தத் திரைப்படம் லோகேஷ் கனகராஜின் சினிமாடிக் யுனிவர்ஸில் இருப்பதால் லோகேஷ்- விஜய் இருவரும் மூன்றாவது முறையாக இணைவது உறுதி என்று தயாரிப்பாளர் லலித் சமீபத்தில் தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
'லியோ' படத்திற்கு கிடைத்துள்ள நெகடிவ் விமர்சனங்களையும் உற்று நோக்குவதாக தெரிவித்த லோகேஷ் கனகராஜ் இந்த விமர்சனங்களைத் தான் தன்னுடைய அடுத்தப் படமான 'தலைவர் 171' படத்திற்கு எடுத்துக்கொண்டு, அந்தப் படத்தை மேலும் சிறப்பாக கொடுக்க முயற்சிப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
lokesh kanakaraj and vijay joind third time