லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் பட அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். சமீபத்தில் இவரது இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

தற்போது லோகேஷ் கனகராஜ் 'தலைவர் 171' வது திரைப்படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'ஜி-ஸ்குவாட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். 

முதற்கட்டமாக தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவி இயக்குனர்களின் திரைப்படங்களை தயாரிக்க உள்ளதாக லோகேஷ் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் உறியடி விஜய்குமார் திரைப்படத்தினை தனது முதல் படமாக அறிவித்துள்ளார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகரும் இயக்குனருமான உறியடி விஜயகுமாரும் லோகேஷ் கனகராஜ் நீண்ட நாள் நண்பர் ஆவர். இவர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்தில் வசனம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lokesh Kanagaraj Production Company First movie update


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->