படாஸ் "பாக்ஸ் ஆபிஸ்" சம்பவம்!! ஜெயிலரை தட்டி தூக்கிய லியோ.!!
Leo movie collection grossed more than Jailer movie
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெய்லர் திரைப்படம் 12 நாட்களில் உலகம் முழுவதும் 510 கோடி ரூபாயை வசூல் செய்தது. இதனை விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் முறியடித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ அறிவித்துள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் "தீப்பிடிக்காத பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்ட்.! உங்களால் எதுவும் செய்ய முடியாது.! வெறும் 12 நாட்களில் 540+ கோடிகள் மொத்த வசூல். உலக அளவில் லியோ செய்த பாக்ஸ் ஆபிஸ் சம்பவம்" என அறிவித்துள்ளது. நாளை லீயோ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நிலையில் தயாரிப்பு நிறுவனத்தின் இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
Leo movie collection grossed more than Jailer movie