பிக் பாஸ் வீட்டில் நுழைந்த ஆளும் கட்சி எம்எல்ஏ! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், அம்மாநில ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏ பிரதீப் ஈஸ்வர் கலந்துகொண்டது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. 

தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் பல மாநிலங்களில் பிக் பாஸ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

என்ன தான் வரவேற்பு இருந்தாலும், இந்த நிகழ்ச்சி எழுதிவைக்கப்பட்ட ஸ்கிரிப்ட் படிதான் நடப்பதாகவும், கலாச்சார சீர்கேடு என்ற ஒரு விமர்சனமும் முன் வைக்கப்படுகிறது.

மேலும், அரசியல், தேர்தல் பிரச்சாரம், தனிப்பட்ட அல்லது ஒரு அமைப்பின் சித்தாந்தத்தை பரப்பும் தலமாகவும் இதனை சிலர் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்நிலையில், கர்நாடக பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார்.

நம்மூரில் அரசியல் கட்சியின் தலைவரே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது இதெல்லாம் ஒரு சர்ச்சையை என்று நீக்கல் கேட்பது புரிகிறது.

ஆனால், சர்ச்சை அவரில்லை. இந்த நிகழ்ச்சியில் ஒரு மக்கள் பிரதிநிதி கலந்துகொண்டதுதான் இப்போது சர்ச்சையாகியுள்ளது.

அண்மையில் வெளியான நிகழ்ச்சியின் ஃப்ரோமோவில் சிக்கபள்ளாபூர் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ பிரதீப் ஈஸ்வர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் காட்சிகள் வெளியாகின.

வெளியான அந்த ப்ரோமோவில், எம்எல்ஏ பிரதீப் ஈஸ்வர் மேள தாளம் முழங்க நடனமாடிக் கொண்டே பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைவதும், "போட்டியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி" என அவர் சொல்வதும் பதிவாகியுள்ளது.

இப்போது இந்த ஃப்ரோமோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதி பிக் பாஸுக்கு செல்வது ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சி என்றும் அவர் மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குரல் எழுப்பியுள்ளனர்.

மேலும், கர்நாடக சபாநாயகரிடம் எம்எல்ஏ பிரதீப் ஈஸ்வர் மீது நடவடிக்கை கோரி புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதி கலந்து கொண்டது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறிங்கன்னுகமன்ட் பண்ணுங்க.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karnataka bigg boss congress mla entry


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->