இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் "கரகாட்டக்காரன் 2".!
Karakatakkaran 2 directed by Venkat Prabhu
கடந்த 1989-ம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடிப்பில் வெளிவந்த படம் கரகாட்டக்காரன். இந்த படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக நடிகை கனகா நடித்திருந்தார்.
இந்த படத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்திற்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது. அனைவரின் மனதையும் ஈர்த்த இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தினை பிரபல இயக்குநரும், இயக்குனர் கங்கை அமரனின் மகனுமான வெங்கட்பிரபு இயக்க உள்ளார் என்று கருதப்படுகிறது.
இந்த இரண்டாம் பாகத்தில் ராமராஜன் கதாபாத்திரத்தில் மிர்ச்சி சிவா நடிக்க உள்ளார் என்றும், முதல் பாகத்தில் நடித்த கவுண்டமணி, செந்தில், கோவை சரளா உள்ளிட்டோர் இந்தப் பாகத்திலும் தொடர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், இந்த கரகாட்டக்காரன் இரண்டாம் பாகத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இது குறித்த உறுதியான தகவல் இயக்குனர் வெங்கட்பிரபு தரப்பில் இருந்து வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
English Summary
Karakatakkaran 2 directed by Venkat Prabhu