38 மொழிகளில் வெளியாகும் 'கங்குவா'! - தயாரிப்பாளர் தகவல்! - Seithipunal
Seithipunal


சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'. ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா படாணி கதாநாயகியாக நடிக்கிறார். 

மும்பை, கொடைக்கானல், ஹைதராபாத்தில் இந்த படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. 

இதற்கு முன்னதாக இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு பட குழு வெளியிட்டது. இந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இதுவரை டீசர் 3.5 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து முடிந்த நிலையில் சில காட்சிகளை மட்டும் எடுக்க வேண்டும் என்பதால் படபிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

மேலும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் விஎஃப்எக்ஸ் பணிகளை நம்பி உள்ளதால் அதற்கான குழு கடுமையாக போராடி வருகிறது. 

இதுவரை தமிழில் வெளியான படங்களில் சிறப்பான விஎஃப்எக்ஸ் தரம் கொண்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நேர்காணல் ஒன்றில் பேசியபோது, 'கங்குவா' திரைப்படத்தை உலகம் முழுவதும் சுமார் 38 மொழிகளில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanguva released 38 languages  


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?




Seithipunal
-->