மாஸ்டர் படம் : பொங்கலுக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி.! கேட்கும் முன்பே அனுமதி கொடுத்த அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படம் கடந்த ஆண்டே வெளியாகியிருக்க வேண்டிய திரைப்படம். ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளியாகவில்லை. அதனால், மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழை சமீபத்தில் தான் அளித்தனர்.

அடுத்தாண்டு வெளியாகவுள்ள திரைப்படங்களில் மாஸ்டர் திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அந்த வகையில், இத்திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி எழுந்த நிலையில், ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதனால், பொங்கலுக்கு ரிலீஸாக உள்ள மாஸ்டர் திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு கோரிக்கை வைத்தால் அனுமதி அளிக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். இது விஜய் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

மாஸ்டர் திரைப்படத்தின் தெலுங்கு டீஸர் சமீபத்தில் தான் வெளியானது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kadambur raju speech about Master movie


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal