'ஜோக்கர்' படத்திற்கு ஒரே நேரத்தில் அடித்த ஜாக்பாட்.. வெளியான பட்டியல்.! - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வருடத்துக்கான பட்டியலில் அதிகபட்சமாக ஜோக்கர் திரைப்படம் 11 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஜோக்கர் படத்திற்காக ஜாக்குயின் பீனிக்ஸ்(Joaquin போயினீஸ்) சிறந்த நடிகர்களுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a Time in Hollywood), தி ஐரிஷ் மேன் (The Irishman), 1917 உள்ளிட்ட படங்களும் 4 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் Once Upon a Time in Hollywood படத்தில் நடித்த லியோனார்டோ டிகாப்ரியோ (Leonardo DiCaprio)  சிறந்த நடிகர்களுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மேரேஜ் ஸ்டோரி (Marriage Story) படத்திற்காக ஸ்கார்லெட் ஜான்சன் உள்ளிட்டோரும் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் உள்ளனர். 

 பிப்ரவரி 9-ஆம் தேதி 92-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

joker film nominee for oscar award


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal