சிம்புவும், ஜெய்யும் இவ்வளவு க்ளோசா?! ஜெய் பர்த்டேக்கு சிம்பு என்ன பண்ணிருக்காரு பாருங்க.!  - Seithipunal
Seithipunal


நடிகர் ஜெய் நேற்று தனது 38 ஆவது பிறந்தநாளை தனது நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது நடிகர் சிம்பு அவருக்கு சர்ஃப்ரைஸ் கிப்ட் ஒன்றைக் கொடுத்து வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

நடிகர் ஜெய் பகவதி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு சென்னை 28 படத்தில் நடிகராக அறிமுகமாகி சுப்பிரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஏப்ரல் 6 நேற்று தனது 38வது பிறந்தநாளை தனது நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் ஜெய்யின் பிறந்தநாளுக்கு நடிகர் சிம்பு ஜெய்க்கு கேக் ஊட்டி சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றையும் கொடுத்து அவரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இதனையடுத்து நடிகர் ஜெய் தனது பிறந்தநாளுக்கு நேரிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் நேரில் வந்து வாழ்த்து கூறி சிறப்பான நாளாக்கிய சிம்புவிற்குவிற்கு நன்றி எனவும் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jay happy with Simbu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal