ஓ.டி.டி.யில் வெளியானது ‘ஜமா’ திரைப்படம்! - Seithipunal
Seithipunal


இயக்குனர் பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள திரைப்படம்  ஜமா. இந்த திரைப்படத்தில் அம்மு அபிராமி, சேத்தன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 'ஜமா' என்ற தலைப்பு தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது.  பிரபல தெருக்கூத்து கலைஞர் கலைமாமணி தாங்கல் சேகர் நடிகர்களுக்கு தெருக்கூத்து பயிற்சி அளித்தார். இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், கோபால கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளின் ஒருவராக திகழும் அம்மு அபிராமி, பைரவா திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தொடர்ந்து விஷ்ணு விஷாலின் ராட்சசன், தனுஷின் அசுரன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் தெருக்கூத்து சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருந்த இந்த படம் கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.  தொடர்ந்து இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jama movie released in OTT


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->