ஜெயிலர் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. இந்த திரைப்படம் வெளியாகி 3 வாரங்கள் கடந்த நிலையில் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரி குவித்து வருகிறது.

இதுவரை உலகம் முழுவதும் 530 கோடிகளுக்கு மேல் வசூலாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள இந்த நிலையில் திரையரங்குகளில் பார்க்காத ரஜினி ரசிகர்கள் ஓடிடியில் படம் எப்போது வெளியாகும் என பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது ஜெயிலர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதியை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி ஜெயிலர் திரைப்படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பெரும்பாலான படங்களை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கி வந்த நிலையில் ரஜினியின் டெய்லர் படத்தை அமேசான் பிரேம் கைப்பற்றியுள்ளது.

ஜெயிலர் படத்திற்கு ரூ.100 கோடி வரை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பட்ஜெட் ஒதுக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது 120 கோடி வரை கொடுத்து அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் ஜெயிலர் படத்தை கைப்பற்றியுள்ளது. ஜெயிலர் படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகும் என்ற அறிவிப்பு ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jailer movie releasing on Sep7th inb amazon prime ott platform


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->