‘29’ லவ் ஸ்டோரியா? இல்லை ஜவ்வு ஸ்டோரியா?29 படத்தின் ரிவியூவ்! படம் பார்த்தவர்கள் சொன்ன கருத்துக்கள்!
Is 29 a love story Or a crime story Review of the movie 29
இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘29’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தை, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோஸ் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் இணைந்து தயாரித்துள்ளன.
படம் வெளியானதையடுத்து சமூக வலைதளங்களில், குறிப்பாக எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
ஒரு ரசிகர் தனது பதிவில், “29 படம் மிகவும் நன்றாக இருக்கிறது. 2010களின் காதல் உணர்வுகளை அழகாக மீட்டெடுத்துள்ளது. காட்சிகளும் வசனங்களும் ரத்னகுமாரின் முந்தைய படங்களின் தனித்துவத்தை நினைவுபடுத்துகிறது. ஷான் ரோல்டனின் இசை பல காட்சிகளை உணர்ச்சிப்பூர்வமாக உயர்த்தியுள்ளது” என்று பாராட்டியுள்ளார்.
மற்றொரு ரசிகர், “படத்தில் சில குறைகள் இருந்தாலும், திருப்தியான அனுபவத்தை தருகிறது. இது ஒரு நல்ல ஃபீல் குட் படம். ரத்னகுமார் தனது விருப்பத்துக்கு ஏற்ற திரைக்கதையை அமைத்துள்ளார். ப்ரீத்தி அஸ்ரானிக்கும் விதுவுக்கும் இந்த படம் முக்கியமான படியாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒரு ரசிகர், “இணையம் முழுமையாக வாழ்க்கையை ஆக்கிரமிக்காத காலத்தில் நடந்த காதலை மிகவும் இயல்பாக காட்டியிருக்கிறார் ரத்னகுமார். 29 வயது ஆணும் 21 வயது பெண்ணும் இடையே உருவாகும் காதலை மையமாகக் கொண்டு, கடந்த கால நினைவுகளை மீண்டும் நினைவூட்டும் வகையில் படம் அமைந்துள்ளது” என்று எழுதியுள்ளார்.
திரைப்படத்தை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் காதல், நகைச்சுவை, உணர்ச்சி ஆகிய மூன்றையும் சமநிலையுடன் கொண்ட படமாக வர்ணித்து வருகின்றனர்.
தேர்தல் சூழ்நிலை காரணமாக இருந்த பரபரப்பையும் மீறி படத்திற்கு கிடைத்திருக்கும் நேர்மறை வரவேற்பு, வரவிருக்கும் நாட்களில் வசூலிலும் நல்ல முன்னேற்றம் தரும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.
English Summary
Is 29 a love story Or a crime story Review of the movie 29