வெந்து தணிந்தது காடு! பிக் பாஸ்க்கு வணக்கத்த போடு! சுரேஷ் கொடுக்கும் கூல் என்ட்ரி! - Seithipunal
Seithipunal


மக்கள் நீதி மய்ய கட்சி தலைவரும் நடிகருமான கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 7வது சீசன் நிகழ்ச்சி அக்.1ம் தேதி முதல் பிரமாண்டமாக தொடங்கி தொடர்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது வரை 6 சீசன்களை  வெற்றிகரமாக முடித்துள்ள நிலையில் 7வது சீசன் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் 7வது சீசன் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிக் பாஸ் 7 சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் நடிகர் கூல் சுரேஷ் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சரியான பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் கூல் சுரேஷ் தற்பொழுது தன்னுடைய வசனத்தை வைத்து படங்களுக்கு ப்ரோமோஷன் செய்து வருகிறார்.

கடைசியாக மன்சூர் அலிகான் நடித்த சரக்கு படத்தின் ப்ரோமோஷன் விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளி கழுத்தில் மாலை போட்டு சர்ச்சையில் சிக்கிய கூல் சுரேஷ் அதற்கு மன்னிப்பு கேட்டு வீடியோ பதிவிட்டு இருந்தார். மேலும் நான் வறுமையில் இருக்கிறேன், தயவுசெய்து எனக்கு உதவுங்கள் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில் பிக் பாஸ் 7வது சீசன் நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி நிகழ்ச்சியின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சோவியலாக பழகி தனது காமெடி மூலம் மக்களை சிரிக்க வைக்கும் கூல் சுரேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் என்பது நிதர்சனமான உண்மை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Info cool suresh will participate in Big Boss season7


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->