ரஜினி, விஜய், அட்லீ படம் தான் காரணமா? ரசிகரின் கேள்விக்கு ஷாருக்கான் பதில்! - Seithipunal
Seithipunal


ஜவான் படத்தின் தனது கதாபாத்திரத்துக்காக ரஜினிகாந்த், விஜய், அல்லு அர்ஜுன், யஷ் உள்ளிட்டோரின் படங்களைப் பார்த்ததாக ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

பிகில் படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கியுள்ள ஜவான் படத்தில் ஷாருக்கான் நடித்துள்ளார். இந்த படத்தில் நயன்தாராவும், விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பிரிவ்யூ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் ஷாருக்கான் அடிக்கடி #AskSRK என்ற தலைப்பில் தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பார். அந்த வகையில் இன்றும் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

ரசிகர் ஒருவர், ஜவான் படத்தில் உங்கள் கதாபாத்திரத்திற்காக நிறைய படங்கள் பார்க்க வேண்டியிருந்ததா? என்று கேள்வி கேட்டார். இந்த கேள்விக்கு பதிலளித்த ஷாருக்கான், “நிறைய அட்லீ படங்களை பார்த்தேன்.

சினிமா எனும் உருவாக்கப்பட்ட உலகத்தின் உடல் மொழியை புரிந்துகொள்வதற்காக விஜய், அல்லு அர்ஜுன், ரஜினிகாந்த், யஷ் உள்ளிட்ட ஏராளமான நடிகர்களின் படங்களை பார்த்தேன்” என்று அதற்கு பதிலளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

I Saw Rajinikanth Vijay films for Jawaan Shah Rukh Khan


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->