தனது திருமணம் பற்றி கூறிய அஜித் பட நடிகை.!
Huma Qureshi opens up about marriage
தமிழில் சூப்பர் ஸ்டார் நடித்த காலா திரைப்படத்தில் ஜெரினா வாக மக்களுக்கு அறிமுகமானவர் ஹூமா குரேஷி. இதனைத் தொடர்ந்து அஜித்குமார் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர்.
பாலிவுடில் சூப்பர் ஹிட் திரைப்படமான கேம்ஸ் ஆஃப் வசேபூர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றவர். இவர் தற்போது வெப் சீரியஸ்களிலும் முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து பல திரைப்படங்களிலும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

பாலிவுட்டில் தற்போது கல்யாண சீசன் நடைபெற்று வருவதால் இவரிடமும் எப்போது கல்யாணம் என்ற கேள்வி அவர் எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் அந்தக் கேள்விகளுக்கு ஹூமா குரேஷி. பதிலளித்திருக்கிறார்.
திருமணம் பற்றி பேசிய ஹூமா குரேஷி."தான் திருமணத்திற்கு அவசரப்படவில்லை என்றும் அதற்கான எந்த அழுத்தமும் தனக்கு இல்லை என்றும் குறிப்பிட்டார். சரியான நபருக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என கூறியவர் அப்படி ஒரு நபரை சந்தித்தால் அவர் எனக்கு சரியானவர் என நான் நினைத்தால் திருமணம் செய்து கொள்வேன் என குறிப்பிட்டு இருக்கிறார்.
English Summary
Huma Qureshi opens up about marriage