"வாய்ப்பு வேணும்னா நிர்வாணமா நில்லுங்க" ஹிட் இயக்குனருக்கு இப்படி ஒரு கேவலமான பழக்கமா?!  - Seithipunal
Seithipunal


சினிமாவில் தனக்கு வாய்ப்பு வேண்டும் என்றால், என்முன் நிர்வாணமாக நிற்க வேண்டும் என தன்னிடம் இயக்குனர் சாஜித் கான் கூறியதாக பிரபல நடிகையும் மாடல் அழகியுமான போலா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாலிவுட்டில் ஹவுஸ்ஃபுல், ஹே பேபி, ஹிம்மத்வாலா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் சாஜித் கான். இவர் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். இந்தநிலையில், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்திய மீ டூ நிகழ்ச்சியில் இவருக்கு எதிராக சில நடிகைகள் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இவருக்கு தயாரிப்பாளர்கள் ஓர் ஆண்டுகாலம் தடை விதித்தனர்.

இந்த நிலையில், பிரபல நடிகை போலா, "இயக்குனர் சஜித் கானுக்கு எதிராக ஒரு பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இணையதள பக்கத்தில் தெரிவித்து இருப்பது என்னவென்றால், நான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஹவுஸ்புல் பட வாய்ப்பிற்காக சாஜித் கானை சந்தித்ததாகவும், அப்போது எனக்கு 17 வயது இருக்கும் என்றும், திரைத்துறையில் வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால், தன் முன்னால் நிர்வாணமாக நிற்க வேண்டும் என அவர் கூறியதாகவும் தெரிவித்திருந்தார். 

மேலும் தன்னிடம் அவர் மிக மோசமாக நடந்து கொண்டதாகவும், அது தனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது எனவும், தெரிவித்திருக்கிறார். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு சாஜித்திற்கு எதிராக மீ டூ நிகழ்ச்சியில்  புகாரெழுந்தபோதே தானும் அவருக்கு எதிராக புகார் கூற நினைத்ததாகவும், ஆனால், தனக்கு ஏற்பட்ட பயத்தின் காரணமாக நான் எதுவும் கூறாமல் இருந்து விட்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

housefull director cheap behavior


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal