இரண்டாம் குத்து பட விவகாரம்: உள்ளே புகுந்த ஹரிநாடார்.! உண்டான பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


இரண்டாம் குத்து படத்தின் இயக்குநரே நாயகனாகவும் நடித்திருக்கிறார். அவரையும் அவருடன் நடித்த நடிகையையும் கைது செய்யச்சொல்லி சரி நாடார் புகார் அனுப்பி இருப்பது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் கடந்த 2018 இருட்டு அறையில் முரட்டு குத்து படம் வெளியானது. இதனை தொடர்ந்து, தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கின்றது. 

சமீபத்தில் அந்த படத்தின் டீஸர் மற்றும் முதல் பார்வை போஸ்டர்கள் வெளியானது. இந்நிலையில் இதுகுறித்து இயக்குனர் பாரதிராஜா கடுமையான கண்டனங்களை தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அவரை தொடர்ந்து தற்போது ஹரிநாடாரும் தனது கண்டனங்களை தெரிவித்து இருக்கின்றார். 

பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அ.ஹரிநாடார், 'இரட்டை அர்த்தமுள்ள அதிகம் பொதிந்துள்ள இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தை தயாரித்த இயக்குநர், நடிகைகள் மற்றும் நடிகர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து இளைய தலைமுறையினரையும் கலாச்சாரத்தையும் காக்க வேண்டும் என சென்னை காவல்துறை ஆணையருக்கு புகார் மனு ஒன்றை ஆன்லைன் மூலமாக அனுப்பி வைத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

hari nadar police complnait against idanram kuthu


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->