திருமண கோலத்தில் படு ஜோராக இருக்கும் கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்.! வைரல் போட்டோஸ்.!
gowtham kartchik manjima mohan marriage photos viral
நடிகை மஞ்சிமா மோகன் மற்றும் நடிகர் கௌதம் கார்த்திக்கின் திருமணம் சீரும் சிறப்புமாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில், அவர்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும்தான் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர்.

வரவேற்பு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெற வில்லை. குடும்ப விழாவாக இந்த திருமணம் நடந்தேறியுள்ளது. இருவரும் காதலித்த நிலையில், இன்று அவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. தேவராட்டம் திரைப்படத்தின் மூலம் இருவரும் அறிமுகமான நிலையில் அந்தப் படத்திற்கு பின் இருவரும் காதலிக்க துவங்கியுள்ளனர்.
அடிக்கடி இவர்களது காதல் ரகசியங்கள் கசிந்து வரும் நிலையில் சமீபத்தில் தான் இருவரும் அந்த காதலை உறுதி செய்தனர். அதன் பின் திருமண தேதி அறிவிக்கப்பட்டு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இந்த திருமணம் நடந்துள்ளது.

இந்த காதல் குறித்து சமீபத்தில் கௌதம் கார்த்திக் பேசியபோது, "படத்தின் போது நல்ல நண்பர்கள். ஒரு வருடம் கழித்து தான் காதல் ஏற்பட்டது. அனைவருக்கும் ஒரு சரியான நபர் கிடைப்பார்கள்.
அவர்கள் தான் நம்மை உண்மையாகவே மனிதனாகுவார்கள். என்னை உண்மையான மனிதனாக மாற்றியவர் மஞ்சிமா." என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.
English Summary
gowtham kartchik manjima mohan marriage photos viral