"கோல்டன் ஸ்பேரோ" பாடல் யூடியூபில் 1 கோடி பார்வையாளர்களை கடந்தது! - Seithipunal
Seithipunal


தனுஷ் இயக்கத்தில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘கோல்டன் ஸ்பாரோ’ தற்போது வரை யூடியூபில் 1 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.

நடிகர் தனுஷ் ‘பவர் பாண்டி’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானனார், பின்னர்,இயக்குனர் தனுஷ் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தனது 50-வது படமான ‘ராயன்’ படத்தை தானே இயக்கி நடித்து உள்ளார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று நல்ல வசூல் ஈட்டியது, ராயன் பட வெற்றியை  தொடர்ந்து நடிகர் தனுஷ் படக்குழுவினருக்கு சைவ விருந்து அளித்தார், 

தற்போது மூன்றாவது திரைப்படமாக  ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. என்ற திரைப்படத்தை தனுஷ் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

சமீபத்தில் இந்த ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’  படத்தின் முதல் பாடலான ‘கோல்டன் ஸ்பாரோ’ படக்குழு வெளியிட்டது. நடிகை பிரியங்கா மோகன் இப்பாடலுக்கு சிறப்பு தோற்றத்தில் நடனமாடியுள்ளார்.

இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்த  "கோல்டன் ஸ்பேரோ" பாடல் தற்போது வரை யூடியூபில் 1 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Golden Sparrow Song Crosses 1 Crore Views On YouTube


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->