பிரபல ஆபாச நடிகை ஷகீலாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது.! ஷகீலாவாக நடிப்பது யார் தெரியுமா.?! ரசிகர்களுக்கு விருந்தளிக்க போகும் அந்த கதாநாயகியை நீங்களே பாருங்கள்!!!
பிரபல ஆபாச நடிகை ஷகீலாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது.! ஷகீலாவாக நடிப்பது யார் தெரியுமா.?! ரசிகர்களுக்கு விருந்தளிக்க போகும் அந்த கதாநாயகியை நீங்களே பாருங்கள்!!!
இந்தியாவில், மலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில், ஏராளமான ஆபாச படங்களில் நடித்தவர் ஷகீலா. குறிப்பாக, மலையாளத்தில் அவருக்கு பெரும் வரவேற்பு இருந்தது. இதனால், மோகன்லாக், மம்மூட்டி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களைவிட, ஷகீலாவின் படங்கள் அதிக வசூல் ஈட்டி சாதனை படைத்தன.

தற்போது, வயதான காரணத்தால், படிப்படியாக ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திய நடிகை ஷகீலா, பொதுவான சினிமா படங்களில் சிறு சிறு வேடங்களில் மட்டும் நடித்து வருகிறார். மேலும், அவரது வாழ்க்கை வரலாற்றை பற்றி புத்தகமும் எழுதியுள்ளார். அதில், வறுமை காரணமாகவே இத்தகைய தொழிலுக்கு தள்ளப்பட்டதாக, ஷகீலா குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நடிகை ஷகீலாவின் வாழ்க்கை வரலாறு, இந்தி மொழியில் படமாக தயாராகி வருகிறது. அவரது வேடத்தில் ரிச்சா சதா நடித்து வருகிறார். இந்திரஜித் லங்கேஷ் இந்த படத்தை இயக்குகிறார். இதில் ஷகீலா வேடத்தில், கேரளாவை சேர்ந்த ரிச்சா சதா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக, ராஜீவ் பிள்ளை நடிக்கிறார்.

மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் உள்ள தீர்த்தஹள்ளி என்ற பகுதியில் நடைபெற்று வரும் நிலையில், இது குறித்து ரிச்சா சதா கூறுகையில், ஷகீலாவின் வேடத்தில் நடிப்பது மிகப்பெரிய காரியம். இளமைக்காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவுக்கு நடிக்க வந்த ஷகீலா, சூழ்நிலை காரணமாக ஆபாச படங்களில் நடிக்க தொடங்கினார். அதை உள்ளபடியே படமாக எடுத்து வருகிறோம். அவரைப் போல நடிப்பதில் மிகவும் அக்கறை கொண்டுள்ளேன்,’’ எனக் குறிப்பிட்டார்.

இதேபோல, ஹீரோவாக நடிக்கும் ராஜீவ் பிள்ளையும் இந்த படம் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பாக, சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதையை, டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் இந்தியில் தயாரித்து வெளியிட்டனர். அதில் சில்க் ஸ்மிதாவாக பிரபல நடிகை வித்யா பாலன் நடித்தார். அதன் பிறகு தொடர்ந்து பிரபலங்களின் வரலாறை படமாக எடுத்து வருகின்றனர்.
English Summary
famous actress shakeela history converted to movie in hindi