அரசியல் களத்தில் பரபரப்பு...! மக்களின் தீர்ப்பை மதியுங்கள்! - லாரன்ஸ் விடுத்த 'மாஸ்' அறிக்கை...!
Excitement political arena Respect verdict people Lawrence mass statement
நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தள பதிவின் மூலம் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மக்களின் தீர்ப்பே உயர்ந்த தீர்ப்பு. ஜனநாயகத்தின் இதயத் துடிப்பாக விளங்கும் மக்கள், தங்களது விருப்பத்தை வாக்குகளின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

அந்த மக்களின் ஆணையின் அடிப்படையில் புதிய அரசு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் அளித்த தீர்ப்பை அனைத்து தரப்பினரும் முழுமையான மரியாதையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் மக்களின் விருப்பத்தை புரிந்து கொண்டு அதனை மதிக்கும் தலைவர்கள் எப்போதும் மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெறுவார்கள்.
ஆனால் தேவையற்ற குழப்பங்களையும் பிளவுகளையும் உருவாக்க முயற்சிப்பவர்கள் மக்கள் மத்தியில் அதிருப்தியையே சந்திக்க நேரிடும்.
இறுதியில் அனைத்து அரசியல் தலைவர்களும் மாநிலத்தின் நலனை முன்னிறுத்தி, புதிய அரசு அமைதியாகவும் நிலைத்தன்மையுடனும் அமைய வழிவகுக்கும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
மக்களின் தீர்ப்பு எந்த காலத்திலும் உயர்ந்ததாகவே கருதப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Excitement political arena Respect verdict people Lawrence mass statement