வாய் பிளக்கவைத்த வசூல் நிலவரம்.. டான் படக்குழுவினர் படுகுஷி.!
Don movie collection in 11 days
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான டாக்டர் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. அடுத்ததாக இவர் டான் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
டான் படமும் டாக்டர் படத்தை போலவே முழுக்க முழுக்க நகைச்சுவையை உள்ளடக்கியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க அனிருத் இசையமைத்திருந்தார்.

இதில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். சமீபத்தில், இந்த படத்தின் சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடப்பட்டது. அதில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் கலந்துகொண்டனர். இதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகியது.
கடந்த மே 13 ஆம் தேதி இந்த படம் வெளியாகிய இந்த படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.98 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. விரைவில் ரூ.100 கோடியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Don movie collection in 11 days