#AK62 : அஜித் குமாரின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவர் தான்... வெளியான உறுதியான தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் ‌.

இதனையடுத்து பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கூறப்பட்ட நிலையில், வேறொரு இயக்குனர் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது.

அந்த வகையில் நடிகர் அஜித் குமாரின் AK62 படத்தை விக்னேஷ் சிவனுக்கு பதிலாக, இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director mahizh Thirumeni direct Ajith Kumar 62 movie


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->