தலயுடன் கைக்கோர்க்க இருந்த தளபதி.! பின் நடந்தது என்ன.?! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் போட்டி நடிகர்கள் கலாச்சாரம் பழங்காலம் தொட்டி இருந்து வருகிறது. இந்தப் போட்டி எம்ஜிஆர்- சிவாஜியில் தொடங்கி ரஜினி - கமல்,  விஜய் - அஜித், சிம்பு - தனுஷ், எனக் காலங்கள் மாறினாலும் பாரம்பரியம் மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

விஜய் மற்றும் அஜித் இருவரும் ராஜாவின் பார்வையிலே என்ற திரைப்படத்தில் மட்டுமே ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார் அஜித் குமாரின் வெற்றிப்பட இயக்குனர்களில் ஒருவர்.

அஜித் குமார் விக்ரம் மற்றும் ரகுவரன்  ஆகியோரின் நடிப்பில் உருவான வெற்றிப் படம் உல்லாசம். இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்தத் திரைப்படத்தை ஜே.டி மற்றும் ஜெர்ரி  ஆகியோர் இயக்கியிருந்தனர். இந்தப் படம் அஜித் கேரியரில் ஒரு முக்கிய திரைப்படமாக அமைந்தது.

இந்தத் திரைப்படத்தின் இயக்குனர்கள் ஜே.டி மற்றும் ஜெர்ரி சமீபத்திய பேட்டி ஒன்றில் உல்லாசம் படம் பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளனர். அந்தத் திரைப்படத்தை அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கும்போது நண்பர்கள் சிலர் விக்ரமிற்கு பதிலாக விஜய் நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்கள். ஆனால் விக்ரம் அவருடைய கல்லூரி நண்பர் என்பதால் விக்ரமை திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த காலகட்டங்களில் விக்ரம் சினிமா துறையில் மிகவும் கஷ்டப்பட்டு போராடிக் கொண்டிருந்தார். இதன் காரணமாக தனது நண்பருக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க அவரை வைத்து இந்த படத்தை எடுத்துள்ளார். இந்த பேட்டி தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

director jd and jerry talks about ullasam movie and vijay ajith combo


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->