நாட்டாமை படத்தின் முக்கிய புள்ளி உடல் நலக்குறைவால் காலமானார்.! சோகத்தில் தமிழ்த்திரை உலகம்.!
director erode sounder
நாட்டாமை படத்தின் வசனகர்த்தாவும், சிம்ம ராசி படத்தின் இயக்குனருமான ஈரோடு சௌந்தர் உடல் நலக்குறைவால் இன்று காலமானர். இவருக்கு வயது 63 ஆகும்.
ஈரோடு மாவட்டம் நாதகவுண்டன் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சௌந்தர் ராஜன். இவர் சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதி பிரபல வசன கர்த்தாவாக திகழ்ந்தவர் ஆவார்.

மேலும், சிம்ம ராசி என்ற திரைப்படத்தை சரத்குமாரை வைத்து இயக்கி இயக்குனராகவும் தன திறமையை வெளிப்படுத்தினார். இவர் சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம் உள்ளிட்ட15 திரைப்படங்களுக்கு வசனம் எழுதி உள்ளார். இதில் பல படங்கள் விருதுகளை குவித்த படங்கள் ஆகும்.
சிறுநீரக தோய்தொற்றால் பாதுக்கப்பட்டிருந்த இவர், ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (டிசம்பர் 5) சிகிச்சை பலனின்றி காலமானார்.