விமர்சனங்களால் தத்தளிக்கும் முன்னாள் முதலமைச்சர்...மீண்டும் பாஜகவுடன் இணைவாரா OPS ?
Former Chief Minister reeling from criticism Will OPS join BJP again
தமிழகத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் - மே மாதங்களில் சட்டசபை தேர்தல் வருகிறது.இதனால் அரசியல் பரபரப்புகள் அரங்கேற ஆரம்பித்துவிட்டன. தமிழகத்தில் வலுவான நிலையில் திமுக கூட்டணியும்,அதிமுகவும் வலுவான கூட்டணியை அமைக்க அதிமுகவும் கடுமையாக முயற்சித்து வருகிறது.இதில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த அதிமுகவால், கடந்த வாரம் நீண்ட காலமாக அங்கம் வகித்து வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பா.ஜனதா கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டிருந்த நிலையில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதுவே அவர் பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதற்கான காரணமாக கருதப்பட்டது.பிரதமருடன் சந்திப்பு பிரச்சினையில் நேரம் கேட்டு எழுதியிருந்த கடிதத்தையும், மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய செல்போன் மேசேஜ் போன்றவற்றையும் காட்டி ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். இதுகுறித்து பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், ''அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, பகைவனும் இல்லை, அரசியலில் எதுவும் நடக்கலாம்'' என்று தெரிவித்தார்.பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியதும், அவரது பேட்டியும் வலைத்தளங்களில் பல்வேறு யூகங்களை கிளப்பி விவாதமாக மாறியது.
இந்த நிலையில், பாஜக தரப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்திடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று, ஓ.பன்னீர்செல்வத்தை தொலைபேசி மூலம் தமிழக பாஜக நிர்வாகிகள் தொடர்பு கொண்டு உரையாடினார். அப்போது, ஓ.பன்னீர்செல்வத்திடம், "பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் சென்னை வர இருக்கிறார்.அவர் உங்களை சந்திக்க விருப்பப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதும் இதற்கு ஓ.பன்னீர்செல்வம், நான் எனது ஆதரவாளர்களுடன் பேசிய பிறகே இதுகுறித்து முடிவு செய்ய முடியும்" என்று தெரிவித்துள்ளார்.
பாஜக அழைப்பு காரணமாக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பா.ஜனதா தரப்பு தெரிவிக்கையில், ‘ஓ.பன்னீர்செல்வம் எங்களுடன் இருக்கவே விரும்புகிறோம். பிரதமர் மோடி 3-வது வாரத்தில் தமிழகம் வரும்போது,அவரை சந்திக்க வைக்க ஏற்பாடு செய்யப்படும்' என்றனர். இதுகுறித்து அக்கட்சி நிர்வாகிகளுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.
English Summary
Former Chief Minister reeling from criticism Will OPS join BJP again