புதுச்சேரியில் பரபரப்பு.. பாரில் மது அருந்திய இளைஞர் குத்திக் கொலை.!!
youth murder in puthuchery bar
மதுபானம் விற்பனை அதிகளவில் நடைபெறும் இடங்களில் ஒன்றான புதுச்சேரியில் அதிகளவில் பார்களும் இயங்கி வருகின்றன. இந்த பார்களில் எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் மது அருந்துவார்கள்.
இந்த நிலையில், புதுச்சேரியில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் மதுபான பாரில் இளைஞர்களுக்கும் பவுன்சர்களுக்கும் இடையிலான தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரில் மது அருந்தி கொண்டிருந்த போது பெண் ஒருவரை இடித்தது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் பவுன்சர்கள் இளைஞர்களை அப்புறப்படுத்த முயன்றபோது பவுன்சர் கத்தியால் குத்தியதில் இளைஞர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கத்தியால் குத்திய பவுன்சரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
English Summary
youth murder in puthuchery bar