இயக்குநர் பாரதிராஜா ICU-வில்…! கடுமையான நுரையீரல் தொற்று உறுதி...!
Director Bharathiraja ICU severe lung infection confirmed
‘சிவப்பு ரோஜாக்கள், கிழக்கு சீமையிலே, முதல் மரியாதை, வேதம் புதிது’ போன்ற காலத்தை வென்ற படைப்புகளின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை தன் பக்கம் திருப்பியவர் இயக்குநர் பாரதிராஜா.
ஆனால், கடந்த மார்ச் மாதம் அவரது மகன் மனோஜ் திடீரென மறைந்ததை தொடர்ந்து, பாரதிராஜா ஆழ்ந்த மன வேதனையில் மூழ்கி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த மன அழுத்தத்துக்கிடையே, உடல்நலக் குறைவு காரணமாக அவர் சமீப காலமாக அவதிப்பட்டு வந்தார்.

குறிப்பாக, மூச்சுத் திணறல் மற்றும் வீசிங் போன்ற சுவாசப் பிரச்சனைகள் அதிகரித்த நிலையில், கடந்த வாரம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது வெளியான புதிய தகவலின்படி, பாரதிராஜாவுக்கு கடுமையான நுரையீரல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதித்து சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
English Summary
Director Bharathiraja ICU severe lung infection confirmed