தோனி தயாரிக்கும் தமிழ் படத்தின் டைட்டில் அறிவிப்பு.. அடடே நடிகர்கள் இவர்களா? - Seithipunal
Seithipunal


சமீபத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி தனது சொந்த தயாரிப்பில் திரைப்படங்கள் தயாரிக்கப் போவதாக பல்வேறு செய்திகள் வெளியாகி இருந்தது. அத்துடன் இவரது முதல் திரைப்படம் தமிழில் தான் என்று கூறப்பட்டது.

இதில் முதல் முதலில் நடிகர் விஜய்யை வைத்து தோனி படம் தயாரிப்பாளர் என்று வெளியான தகவலில் தெரிவிக்கப்பட்டது. சூர்யா, அஜித் என்று பல முன்னணி நடிகர்களின் பெயர் அடிபட்ட நிலையில் தகவல் வெளியாகியது.

அதன்படி மகேந்திர சிங் தோனி தயாரிப்பில் முதல் தமிழ் படத்தின் டைட்டில் மற்றும் நடிகர், நடிகைகள் குறித்து அறிவிப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த டத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு LGM (Let's Get Married) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை நதியா, ஹரிஷ் கல்யாண், லவ் டுடே இவானா மற்றும் காமெடி நடிகர் யோகி பாபு நடிக்க உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhoni produce movie title announced


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->