வசூல் வேட்டையில் தனுஷின் 'வாத்தி'திரைப்படம்.. இதுவரை எவ்வளவு தெரியுமா?
Dhanush vathi movie collected 100 crores
கோலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தனுஷ். தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து அவர் வேறு படங்களில் கமிட்டாகியிருக்கிறார். அந்த வகையில் தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி சம்யுக்த்தா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இதில், கடந்த பிப்ரவரி 17ம் தேதி திரையரங்குகளில் வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் வாத்தி திரைப்படம் இதுவரை 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
English Summary
Dhanush vathi movie collected 100 crores