கேப்டன் மில்லர் இயக்குனருடன் மீண்டும் இணைந்த தனுஷ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Dhanush next project with Arun madheshwaran
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சிவராஜ்குமார், சந்திப் கிசான் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடிக்க உள்ளார். இதனையடுத்து தனுஷின் 51-வது படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத தனுஷின் 51 வது திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ளது.

இந்த நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
English Summary
Dhanush next project with Arun madheshwaran