மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும் தனுஷின் சூப்பர் ஹிட் திரைப்படம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழன் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தில் அமலாபால், சமுத்திரகனி, விவேக், சரண்யா பொன்வண்ணன், சுரபி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருந்தார். தமிழில் மிகப் பெரிய வரவேற்பு பெற்ற இந்த திரைப்படம் தெலுங்கில் ரகுவரன் பி.டெக் என்ற பெயரில் வெளியானது.

இந்த நிலையில் வேலையில்லா பட்டதாரி திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி மீண்டும் திரையரங்களில் வெளியாக உள்ளது. சமீபத்தில் சூர்யாவின் வாரணம் ஆயிரம் திரைப்படம் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வரவேற்பு பற்றி நிலையில் தனுஷின் இந்த திரைப்படம் தற்போது வெளியாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dhanush in VIP movie re release on August 18 in Andhra


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->