தனுஷின் 'வாத்தி' திரைப்படத்தின் ட்ரெய்லர் எப்போது? படக்குழு அறிவிப்பு.!
Dhanush in vathi movie trailer released on today evening
தமிழ் திரைப்பட துறையில் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். அதனை தொடர்ந்து தனது திறமையான நடிப்பினால் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.
ஆரம்பம் முதலே சிறந்த நடிப்பை வழங்கி ரசிகர்களை கவர்ந்தவர். ஆடுகளம், புதுப்பேட்டை, வட சென்னை, அசுரன், கர்ணன் என அவரின் நடிப்பு நன்முறையில் அனைவராலும் கவரும் அளவிற்கு இருக்கிறது. சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரூ.100 கோடி வசூலை பெற்றது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் மற்றும் வாத்தி உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகின்றன. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அருள் மாதேஸ்வரன் இயக்குகிறார். இதில் நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கின்றார்.

மேலும் இந்த திரைப்படத்தில், சந்தீப் கிஷான் மற்றும் நிவேதா சதிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதில் ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார்.
சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிலையில் 'வாத்தி' படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5.04 மணிக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
English Summary
Dhanush in vathi movie trailer released on today evening