தனுஷின் 'வாத்தி' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? படக்குழு அறிவிப்பு.!
Dhanush in vathi movie OTT release on March 17 in Netflix
கோலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தனுஷ். தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து அவர் வேறு படங்களில் கமிட்டாகியிருக்கிறார். அந்த வகையில் தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, சம்யுக்த்தா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கடந்த பிப்ரவரி 17ம் தேதி வெளியான வாத்தி திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த நிலையில் வாத்தி திரைப்படம் இதுவரை 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் வார்த்தை திரைப்படம் நெட்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் மார்ச் 17ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
English Summary
Dhanush in vathi movie OTT release on March 17 in Netflix