வசூலை வாரி குவிக்கும் தனுஷின் 'வாத்தி' திரைப்படம்.. இதுவரை எவ்வளவு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தனுஷ். தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. 

இதனைத் தொடர்ந்து அவர் வேறு படங்களில் கமிட்டாகியிருக்கிறார். அந்த வகையில் தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி சமித்தா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கடந்த பிப்ரவரி 17ம் தேதி வெளியான வாத்தி திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில் வாத்தி திரைப்படம் 8 நாட்களில் 75 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhanush in vathi movie collected 75 crores


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->