ரத்தம் தெறிக்க தெறிக்க தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் டீசர் வெளியீடு.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது சாணி காயிதம், ராக்கி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில் இன்று தனுஷின் பிறந்த நாளையொட்டி கேப்டன் மில்லர் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இந்த டீசரில் வரலாற்று பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளதாக காட்டப்பட்டுள்ளது. 

மேலும் துப்பாக்கிகளும், பீரங்கிகளும் வெடிக்கும் சத்தத்துடன் அதிரடி ஆக்சன் நிறைந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளது. தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த திரைப்படம் டிசம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhanush in captain Miller movie teaser release


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->