விஜய்யின் லியோ படத்தில் இணைந்த கொக்கி குமார்.? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்.!
Dhanush act in Vijay in Leo movie
லியோ படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் மிஷ்கின் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் முடிவடைந்த நிலையில் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகலையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் லியோ படத்தில் நடிகர் தனுஷ் கொக்கி குமார் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் தனுஷ் சமீபத்தில் மொட்டை அடித்து வித்தியாசமான கெட்டப்பில் தோன்றியதால் அந்த கெட்டப் லியோ படத்துக்கு தான் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. ஆனால் இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர் அறிவிப்பையும் படக்குழு இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Dhanush act in Vijay in Leo movie