தனுஷின் 50வது திரைப்படம் குறித்த அப்டேட்.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். அதனை தொடர்ந்து தனது திறமையான நடிப்பினால் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். ஆரம்பம் முதலே சிறந்த நடிப்பை வழங்கி ரசிகர்களை கவர்ந்தவர். 

இவர் நடித்த ஆடுகளம், புதுப்பேட்டை, வட சென்னை, அசுரன், கர்ணன் என அவரின் நடிப்பு நன்முறையில் அனைவராலும் கவரும் அளவிற்கு இருக்கிறது. சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். 

அடுத்ததாக தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அருள் மாதேஸ்வரன் இயக்குகிறார். இதில் நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கின்றார்.மேலும் இந்த திரைப்படத்தில், சந்தீப் கிஷான் மற்றும் நிவேதா சதிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதில் ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார். 

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் நடிகர் தனுஷ் சமீபத்தில் திருப்பதி சென்று மொட்டை அடித்து சாமி தரிசனம் செய்திருந்தார். 

அதனைத் தொடர்ந்து தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க தனுஷ் இயக்கி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா, சுதிப் கிஷன் ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhanush 50th update announced


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->