டி.இமானுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம்.! மட்டற்ற மகிழ்ச்சி.! - Seithipunal
Seithipunal


கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சூரரைப்போற்று. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு இருந்ததால் ஆன்லைன் தளமான அமேசான் பிரைம்-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதனை தொடர்ந்து, சூர்யாவின் 40வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இயக்குனர் பாண்டிராஜ் இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றது. 

சூர்யாவின் அடுத்த படம் குறித்த தகவலை வெளியிட்ட இயக்குனர்.! உறுதியான  கூட்டணி.! - Seithipunal

பிப்ரவரியில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது. சூர்யாவுடன் நடிக்கும் பிற கதாபாத்திரங்கள், நடிகைகள் குறித்த தேர்வு நடைபெற்று வருகிறது. முன்னதாக ராஷ்மிகா இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், சூர்யாவுடன் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். 

இந்நிலையில், தனது சமூக வலைத்தள பக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சூர்யாவின் 40வது படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் என்பதை தெரிவித்து இருக்கின்றது. இன்று டி.இமான் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

D imman compose to surya 40


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->