தமிழக திரைத்துறையை உலுக்கும் கொரோனா.. முக்கிய நடிகருக்கு தொற்று உறுதி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு மிக வேகமாக பரவி வருகிறது. 10 நாட்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு சொற்பமாக இருந்த நிலையில். கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 4ஆம் தேதி தினசரி கொரோனா பாதிப்பு 2000 ஆக இருந்த நிலையில், தற்போது 12 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 

அதி வேகமாக பரவும் கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் நடிகர்கள், நடிகைகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இந்நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், புத்தாண்டு பாசிட்டிவ் ரிசல்ட்டுடன் தொடங்கியுள்ளது. கடந்தவாரம் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். பயங்கரமான உடல் வலி, மூக்கடைப்பு, தொண்டை கரகரப்பு மற்றும் காய்ச்சலில் இருந்து விரைவில் மீண்டு வருவேன் என அவர் தெரிவித்துள்ளார். 

இதற்கு முன்னதாக நடிகை திரிஷா, இயக்குனர் பிரியதர்ஷன், இசையமைப்பாளர் தமன், நடிகர் சத்யராஜ்,  அருண் விஜய், மகேஷ்பாபு, நடிகை மீனா ஆகிய சினிமா பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

corona positive for actor vishnu vishal


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->