காண்ட்ராக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரபல நடிகர் மீது வழக்கு பதிவு! - Seithipunal
Seithipunal


கொடைக்கானல், வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிரபல நடிகர் பாபி சிம்ஹா வீடு கட்டி வருகிறார். அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான இடத்தில் வீடு கட்டுவதாக பாபி மீதும், அதே பகுதியில் வீடு கட்டும் நடிகர் பிரகாஷ் ராஜ் மீதும் பொதுமக்கள் புகார் அளித்தனர். 

இதற்கிடையே பாபிக்கும் காண்ட்ராக்டருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு கட்டிட பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் காண்ட்ராக்டருக்கு நடிகர் பாபி பல லட்சம் ரூபாய் தராமல் உள்ளதாகவும் புகார் எழுந்தது. 

இந்நிலையில் காண்ட்ராக்டர் கொடைக்கானல் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது, எனது தங்கும் விடுதிக்கு கடந்த மாதம் 20 ஆம் தேதி நடிகர் பாபி சிம்ஹா மற்றும் நடிகர் ராமச்சந்திர ராஜ் உள்பட 4 பேர் வந்து என்னிடம் வீடு கட்டும் பிரச்சனையில் தலையிட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளனர். 

எனவே பாபி உட்பட 4 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் நடிகர்கள் பாபி சிம்ஹா, ராமச்சந்திர ராஜ் உள்பட 4 பேர் மீது கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

contractor threatened kill famous actor against case 


கருத்துக் கணிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தால் யாருக்கு பயன்?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தால் யாருக்கு பயன்?
Seithipunal