வடிவேலு நடிக்கும் நாய் சேகர் படத்தின் "அப்பத்தா" பாடளுக்கு குவியும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதாநாயகனாக நடித்து வரும் படம் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'. இந்தப் படத்தை தற்போது இயக்குநர் சுராஜ் இயக்கி வருகிறார்.

மேலும், இந்த படத்தில், ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி, ஷிவானி ஆனந்தராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப்படத்தை, லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் 'அப்பத்தா' பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை வடிவேலு பாட, பிரபு தேவா நடனம் அமைத்துள்ளார். இந்தப் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இதற்கிடையே, மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகும் 'மாமன்னன்' படத்திலும் வடிவேலு நடிக்கிறார். மேலும், லைகா நிறுவனம் தயாரிக்கும் 'சந்திரமுகி 2' படத்திலும் நடித்து வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

comedy actor vadivelu new movie nai sekar rreturns appaththa song


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->