பிரபல மிமிக்கிரி கலைஞர் கோவை குணா காலமானார்.! - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கோவை குணா. கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவரான இவர் பழம்பெரும் நடிகர் எம்.ஆர் ராதா குரலை அப்படியே பேசக்கூடிய திறமை கொண்டவர். 

அதுமட்டுமல்லாமல், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட "அசத்தப்போவது யாரு" என்ற நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களைத் தன்வசப்படுத்தியும் வந்துள்ளார். 

நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கோவை குணா சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அதன்பின்னர் உடல் நலக்குறைவு காரணமாகக் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்

அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே நகைச்சுவை நடிகர் மயில்சாமி உயிரிழந்ததற்கு மிமிக்ரி கலைஞர்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்திய நிகழ்ச்சியில் கோவை குணாவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

comedy actor covai guna rest in pieace


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->