பிக்பாஸ்-4 துவக்க தேதி அறிவிப்பு.! ரசிகர்கள் உற்சாகம்.!  - Seithipunal
Seithipunal


வரும் அக்டோபர் 4ம் தேதி பிக் பாஸ் சீசன் 4 துவங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குகின்றார். 

இதுகுறித்த அறிவிப்பு, விஜய் தொலைக்காட்சி அதன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றது. ஏற்கனவே, மூன்று மாதங்கள் முடிவடைந்த நிலையில், குறைபாடுகள் காரணமாக நான்காவது சீசன் ஒளிபரப்புவது தள்ளிப்போனது. 

இந்த நிலையில் நான்காவது சீசனில் யார் யார் இடம் பெறுகிறார்கள் என்பது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது. சில தினங்களுக்கு முன்பாக கமலஹாசன் மகள் பிக்பாஸ் நான்கில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியானது. 

ஆனால் இதுகுறித்து கமலஹாசன் மகள் இல்லை என்று பதில் அளித்து இருந்தார். பிக்பாஸ் வீட்டில் பங்கேற்கும் போட்டியாளர்கள் மற்றும் பிக்பாஸ் குழுவினர் கொரோனாவால் கட்டுப்பாட்டு விதிகளின்படி தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

biggboss 4 starts at oct 4


கருத்துக் கணிப்பு

மழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்?
கருத்துக் கணிப்பு

மழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்?
Seithipunal