Bigg Boss Tamil 8: முதல் போட்டியாளர் இவரா? - Seithipunal
Seithipunal


பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக  கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்நிலையில், கமல்ஹாசனுக்குப் பிறகு யார் வரப் போகிறார்கள் என்பதை சேனல் தரப்பில் மிக  சீக்ரெட்டாக வைத்துள்ளனர். மேலும்  நடிகர் விஜய் சேதுபதி வருவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாகக் தகவல்கள் கிடைக்கின்றன.

இதற்கிடையே போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகளும் தொடங்கி விட்டது. சினிமா, டிவி நட்சத்திரங்கள், சோஷியல் மீடியா  இன்ஃப் ளூயன்சர் எனப் பல தரப்பினருடன் அணுகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் அஸ்வின், ஜாக்குலின் முதலானவர்களின்  பெயர்கள் சோஷியல் மீடியாவில் பல  அடிபடுகின்றன. இந்நிலையில்  பாரதி கண்ணம்மா சீரியல் அருண் நிகழ்ச்சிக்குக் கிட்டத்தட்ட தேர்வாகியிருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இவரிடம் முதல்கட்டமாக சேனல் தரப்பிலிருந்து பேசியிருக்கிறார்களாம்.  

கடந்த பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு டைட்டில் வென்ற அர்ச்சனாவும் இவரும் காதலித்து வருவதாக நீண்ட நாட்களாகவே டிவி உலகம் கிசுகிசுத்து வந்தது. இருவரும் அதை மறுக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அர்ச்சனா ரெகமன்டேஷனில்தான் இந்த வருடம் அருண் நிகழ்ச்சிக்குள் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bigg Boss Tamil 8 Is he the first contestant


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->